பரவி வரும் "பிளாக்ராக்" வைரஸ்: ஆண்ட்ராய்ட் போன் பயனர்களே உஷார்- மத்திய அரசு எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தகவல்களை திருடும் பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக மத்திய அமைச்சர் சஞ்சஸ் தோத்ரே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தகவல்களை திருடும் திறன்
ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களை குறிவைத்து தகவல்களை திருடும் திறன்களை கொண்ட பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது
300-க்கும் அதிகமான செயலிகளில்
மின்னஞ்சல், இகாமர்ஸ் பயன்பாடுகள், செய்தி/சமூக ஊடக பயன்பாடுகள், பொழுதுபோக்கு பயன்பாடுகள், வங்கி, நிதி போன்ற மின்னணு வர்த்தகம் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கான 300-க்கும் அதிகமான செயலிகளில் நுழைந்து தகவல்களை திருடும் ஆற்றல் பிளாக்ராக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே
பிளாக்ராக் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்தார். ஜூலை 2020 முதலே இந்திய கணினி அவசர தீர்வு மையம் தனது வலைத்தளத்திலும், சைபர் ஸ்வச்தா கேந்திராவிலும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தது. அதோடு இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அரசு பல நடவடிக்கைகள்
இதுபோன்று வைரஸ் பயன்பாடுகளை சரிபார்க்கவும், பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தீங்கிழைக்கும் பயன்பாடுகள்
அதேபோல் இதுகுறித்து கூறிய அமைச்சர் சஞ்சஸ் தோத்ரே, இந்த தீங்கிழைக்கும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், விழிப்புணர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் எழுத்து மூலம் பதிலளித்ததில் குறிப்பிட்டார். தகவல் திருடும் செயலிகள் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு
இதுபோல் தீங்கிழைக்கும் குறியீட்டைக் கண்டறிந்து நீக்குவதற்கு அரசு சைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு மூலம் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் தொழில் துறையினர் கூட்டின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது.
6,940 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளது
இந்திய பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, டிஜிட்டல் இந்தியா ஆத்மா நிர்பர் பாரத் ஆப் புதுமை சவாலின் கீழ் மொத்தம் 6,940 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments: