தெரிந்துகொள்வோம் - மீன்கள் தூங்குமா?

 



ஆம் நிச்சயமாக மீன்கள் தூங்குகின்றன. ஆனால் அவை தூங்குகிறதா அல்லது விழித்திருக்கிறதா என்று கண்டறிவது கடினம். ஏனென்றால் அவைகளுக்கு இமைகள் கிடையாது. அவை தூங்கினாலும் இமைகள் இல்லாத காரணத்தால் கண்கள் திறந்தே இருக்கும்.




ஆனால் கிளி மீன்கள் (parrotfish ) தூங்கும் போது தன்னை சுற்றி மெல்லிய கூட்டினை உருவாக்கும். இதனைக்கொண்டு இந்த மீன்கள் தூங்குகிறதா அல்லது விழித்திருக்கிறதா என்று அறிந்துகொள்ளலாம் .






ஒவ்வொரு இரவும் இந்த மீன்கள் தூங்குவதற்கு தன் வாயிலிருந்து போர்வையை உற்பத்தி செய்கிறது. இது தன்னை மற்ற மீன்களிடமும் இருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்ள தனது வாசனையை மறைக்க உதவுகிறது.

No comments:

Powered by Blogger.