தெரிந்துகொள்வோம் - நாய்கள் ஏன் புல்லை உண்கிறது?
நாய்கள் புல்லை தின்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். நாய்கள் வைத்திருபவர்களுக்கு கண்டிப்பாக இந்த விஷயம் தெரிந்திருக்கும். சரி நாய்கள் ஏன் புல்லை தின்கிறது ?
2008 – ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 70 % நாய்கள் புல்லை தின்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மற்ற 30% நாய்கள் தங்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் உண்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள்.
குடலில் உள்ள ஒட்டுண்ணியை நீக்கவோ அல்லது தேவையற்ற உணவை வாந்தி எடுக்க செய்யவோ இவைகள் புற்களை உண்கிறது. இதற்க்கு இந்த பண்பு தங்கள் மூதாதையர்கள் மூலம் வந்திருக்கலாம் என்று நம்பபடுகிறது.
நாய்கள் மட்டும்தான் புற்களை உண்கிறதா? இல்லை சில மாமிச உண்ணிகளும் புற்களை உண்கிறது. குறிப்பாக ஓநாய்கள் புற்களை தின்னும்.
No comments: