மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி? ஆய்வு சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள்
கணவன் மனைவிக்குள் ஏன் சண்டை, சச்சரவுகள் வருகிறது..இதற்கு மூல காரணம் யார்? என்ன செய்தால் குடும்பத்தில் ஏற்படும் இந்த முக்கிய பிரச்சனையை சரி செய்யலாம்? என்றெல்லாம் ஆய்வுகள் செய்து ஒரு விடையைச் சொல்லியிருக்கிறார்கள்.. நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள “இன்டேல்” என்ற தன்னார்வ அமைப்பு அங்குள்ள சுமார் 10 ஆயிரம் பேரிடம் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப நிலை பற்றி பேசி தெளிவான ஒரு முடிவிற்கு வந்து, அது பற்றி நமக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி கணவர்கள் முழு உண்மைகளையும் மனைவியரிடம் சொல்லக் கூடாதாம். இது தவிர தங்களது இயல்பான குணம் என்ன என்பதையும் மனைவி கண்டு பிடிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாதாம். இதையும் விட மனைவியரிடம் பொய் சொல்லி, ஏமாற்றும் கலை தெரிந்திருக்க வேண்டுமாம். இப்படிப்பட்டவர்களிடம் மனைவியாகப்பட்டவர் சண்டைக்கோ அல்லது வம்பிற்கோ வருவதில்லையாம்.
பெரும்பாலும் குடும்பச் சண்டைகளுக்கு மூல காரணம் பெண்கள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அவர்களால் ஆண்களை சாரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தவிர ஆண்கள் எப்போதும் தங்களை “ஐஸ்” வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.இப்படிப்பட்ட பெண்களைச் சமாளித்து குடும்ப வண்டியை சந்தோசமாக ஓட்டுவதற்கு அவர்கள் வழியும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனைவியைப் பார்த்து” ஐ லவ் யூ” சொல்ல வேண்டுமாம். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரு முறை சொல்ல வேண்டுமாம்.இரண்டு நாளுக்கு ஒரு முறை எதிர்பாராத விதமாக கட்டிப்பிடிக்க வேண்டுமாம்.பத்து நாட்களுக்கு ஒரு முறை வெளியில் எங்காவது கூட்டிச் செல்ல வேண்டுமாம். ஓட்டலில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டுமாம்.வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டுமாம்.
இப்படிச் செய்வதோடு சமையல் நன்றாக இருக்கிறதோ? இல்லையோ? “ஆஹா.. ஓஹோ…பேஷ்… ரொம்ப நன்னாயிருக்கு” என்று பாராட்டிப் பேசியும்.”ஏய்..நீ ரொம்ப அழகா இருக்கே” என்று புகழ்ந்து பேசியும் காலம் தள்ளினால் குடும்பச் சண்டை வராதாம்.. ஆகவே இந்த ஆய்வின் முடிவு தெரிவிப்பது குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க ஆண்கள் கையாள வேண்டிய அணுகுமுறைதான் காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள்.
அதன்படி வாரத்திற்கு 10 முறை ஐ லவ் யூ சொல்லுங்கள்…வாரத்திற்கு 10 முறை முத்தமிடுங்கள்…வாரத்திற்கு 7 முறை கட்டி அணைத்து கொள்ளுங்கள்…வாரத்திற்கு 3 முறை செக்ஸ் வைத்து கொள்ளுங்கள்…மாதம் 10 முறையாவது நல்ல கலந்துரையாடலில் ஈடுபடுங்கள்…மாதம் 3 முறை வெளியில் சென்று உணவருந்துங்கள்….மாதம் 3 முறை ஆச்சரியப்படும் காதல் சைகை காட்டுங்கள்…வருடத்திற்கு 2 முறை சுற்றுலா செல்லுங்கள்….அலுவலகங்களில், உங்களை சுற்றி நடக்கும் சுவாராஸ்யமான விஷயங்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது போதும் இனிமையான வாழ்விற்கு!
Who given the heartful affection on them wife never get a fight husband and wife not only made for each other outside should made for each other inside a truthful husband should supported to them wife atleast honest want and speech never keep ice on them wife need truthful ness of heartful of affection enough
ReplyDelete