வாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி?

 வாட்ஸ்அப்பில் தமிழ் மொழியில் எழுதியும், தமிழில் டைப் செய்தும் கருத்துகளை பதிவிடலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.




சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.


தமிழில் தகவலை பரிமாறலாம் 

இந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பலருக்கு தங்களது கருத்துகளை பதிவு செய்வதில் மொழி தடையாக இருக்கிறது. வாட்ஸ்அப்பில் தமிழில் தகவலை பரிமாற விருப்பம் உள்ளதா இதோ எளிய வழிமுறைகள்.






எளிய வழிமுறைகள் 

வாட்ஸ்அப்பில் தங்களது புரட்சிமிக்க கருத்துகளை அழகிய தமிழில் பதிவு செய்து அனுப்பலாம். தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி தமிழில் கருத்துகளை பதிவிடலாம்.






கூகுள் இண்டிக் கீபோர்ட் 

தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் ப்ளே ஸ்டோருக்குள் சென்று கூகுள் இண்டிக் கீபோர்ட் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன் இந்த பயன்பாட்டை திறக்கவும். இதில் தேர்வு மொழியில் தமிழ் என்ற தேர்வை கிளிக் செய்துகொள்ளவும்.





எனெபிள் இன் செட்டிங் 

எனெபிள் இன் செட்டிங்ஸ் தேர்வை கிளிக் செய்யவும். கூகுள் எனெபிள் கீபோர்ட் ஆப்ஷனை அதன் அருகில் இருக்கும் பாக்ஸை டிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம். அடுத்த திரையில் செலெக்ட் இன்புட் மெத்தேட் என்ற பட்டனைத் தட்டவும். பின்னர் இங்கிலிஷ் மற்றும் இந்தியன் லாங்குவேஜ்ஸ் விசைப்பலகை என்பதைத் தேர்வு செய்யவும்.





தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற உள்ளீடு 

அடிஷனல் லாங்குவேஜஸ் விருப்பத்தை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற உள்ளீட்டு முறையை தேர்வு செய்யவும். பின் வாட்ஸ்அப்பை திறந்து தமிழ் டைப் செய்ய விரும்பும் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்தவுடன் டிஸ்ப்ளேவில் கூகுள் இண்டிக் கீபோர்ட் காண்பிக்கப்படும்.




ஸ்மார்ட்போனின் settings ஆப்ஷன் 

கீபோர்ட் காண்பிக்காத பட்சத்தில் ஸ்மார்ட்போனின் settings ஆப்ஷனை தேர்வு செய்து உள்ளே நுழையவும். அதில் Language and input என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உள்ளே நுழையவும். அதில் input methods என்ற பயன்பாட்டின் கீழ் Manage keyboard என காண்பிக்கும் அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும்.




மல்டி லேங்குவேஜ் டைப்பிங் 

அதில் கூகுள் இண்டிக் கீபோர்ட் ஆப்ஷனை டிக் செய்யவும். வெளியே வந்தவுடன் Current Keyboard ஆப்ஷனில் மல்டி லாங்குவேஜ் டைப்பிங் என காண்பிக்கும். பின் வாட்ஸ்அப் ஓபன் செய்து மெசேஜ் பயன்பாட்டை கிளிக் செய்தவுடன் கூகுள் இண்டிக் கீபோர்ட் காண்பிக்கும்.




கூகுள் ஹேண்ட்ரைட்டிங் 

தமிழ் டைப்பிங்கிற்கு அப்பாற்பட்டு தமிழ் எழுதியும் மெசேஜ் அனுப்பலாம் அதற்கு கூகுள் ஹேண்ட்ரைட்டிங் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அதற்குள் சென்று தமிழ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து தமிழ் எழுதி கருத்துகளை பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Powered by Blogger.