வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்! - என்னென்ன ஆவணங்கள் தேவை? #TNElection2021

 தமிழகத்தில், கடந்த 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், பொதுமக்களின் பயனுக்காக தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்ய சுமார் 68,000 வாக்குச்சாவடி மையங்களில் இன்று முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. உங்களில் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.



சிறப்பு முகாம் நடைபெற உள்ள தேதிகள்


நவம்பர் மாதம்


21.11.2020


22.11.2020


டிசம்பர் மாதம்


12.12.2020


13.12.2020


புதிதாகப் பெயர் சேர்க்கப் படிவம் 6, பெயர் நீக்கப் படிவம் 7, திருத்தம் செய்யப் படிவம் 8, சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8-A படிவத்தை நிரப்பி, தேவையான ஆவண ஆதாரங்களில் நகலை இணைத்து, உங்களின் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகரிடம் 15.12.2020-க்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1


முகவரிச் சான்று (கீழ்க்காணும் ஏதாவது ஒன்று - நகல்)


1.பாஸ்போர்ட்


2. ஓட்டுநர் உரிமம்


3. குடிநீர் வரி ரசீது


4. தொலைபேசி ரசீது


5. மின்கட்டண ரசீது


6. காஸ் இணைப்பு ரசீது


7. ஆதார் அட்டை


8. தபால் அலுவலகக் கணக்குப் புத்தகம்


9. குடும்ப அட்டை


10. வருமானவரி ஒப்படைப்புச் சான்று


11. வாடகை ஒப்பந்தம்


12. வங்கிக் கணக்குப் புத்தகம்


13. கிசான் பத்திரம்



வயது சான்று (கீழ்க்காணும் ஏதாவது ஒன்று - நகல்)


1. 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்


2. பிறப்புச் சான்றிதழ்


3. PAN கார்டு


4. ஆதார் கார்டு


5. ஓட்டுநர் உரிமம்


6. பாஸ்போர்ட்


7. கிசான் அட்டை


அடையாளச் சான்று (கீழ்க்காணும் ஏதாவது ஒன்று - நகல்)


1. PAN கார்டு


2. ஓட்டுநர் உரிமம்


3. குடும்ப அட்டை


4. பாஸ்போர்ட்


5. வங்கிக் கணக்கு புத்தகம் போட்டோவுடன்


6. 10-ம் வகுப்பு சான்றிதழ்


7. மாணவர் அடையாள அட்டை


8. ஆதார் அட்டை


சென்னைவாசிகள் கவனத்துக்கு:


சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குச்சாவடிகள் அடங்கிய 902 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.


முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல், திருத்துதலைச் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


No comments:

Powered by Blogger.