உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமல் அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமகாவே மேற்கொள்ளலாம். மேலும் வாகன அபராதம் தொடர்பான விவரங்களையும் ஆன்லைனில் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அலுவலகம் மூலமாக அரசு அலுவலக பணிகள்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றே கூறலாம். தற்போது பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பேமெண்ட் மூலமாகவே நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி பல அரசு அலுவலக பணிகள் ஆன்லைன் மையம் ஆக்கப்பட்டுள்ளன.
வாகனம் தொடர்பான விஷயங்கள்
அதன்படி நமது வாகனம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வதற்கு ஆர்டிஓ(வட்டார போக்குவரத்து அலுவலகம்) செல்லாமலே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். என்னென்ன தேவைகளை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம்
https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்திற்கு சென்று எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்), நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இதில் பூர்த்தி செய்யலாம். அதேபோல் இதற்கான கட்டணத்தை பயனர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.
இணையதளத்தில் ஆன்லைன் படிவம்
parivahan.gov.in என்ற இணையதளத்தில் வாகனச் சான்றிதழ் பெயர் மாற்றம், சாலை வரி, வாகன தகுதி வரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் விண்ணப்பித்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்தலாம்
ஆன்லைன் படிவம் பூர்த்தி செய்த பிறகு கட்டணங்களையும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம். வங்கி இணைய சேவைஸ டெபிட் அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகள் மூலமாக விண்ணப்பத்திற்கு கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்தி ரசீதை அதில் பெற்றுக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள்
வாகன பழகுனர் உரிமம் பெரும்போது ஆன்லைன் மூலம் பெரும் ஒப்புகை சீட்டு, ஆன்லைனில் பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று வாகனம் ஓட்டிக்காட்டும் தேர்வில் கலந்து கொண்டு உரிமத்தினை பெறலாம். அதேபோல் அதிகாரப்பூர்வ ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் பயிற்சி எடுத்து இந்தபணிகளை மேற்கொள்ளலாம்.
அபராதம் எவ்வளவு உள்ளது
அதேபோல் தங்களது வாகனத்துக்கான அபராதம் எவ்வளவு உள்ளது என்பதை பார்க்க echallan.parivahan.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும் அல்லது https://echallan.parivahan.gov.in/index/accused-challan இந்த இணையதளத்துக்கு நேரடியாக செல்லலாம்.
வாகன எண்ணை பதிவிட்டு அறியலாம்
அதில் தங்களுக்கு காவல்துறை கொடுத்த ரசீது எண்ணை பதிவிட்டு அபராதத்தை காணலாம். அதேபோல் அருகில் வாகன எண் என்ற தேர்வு காண்பிக்கப்படும் அதை தேர்வு செய்து தங்களது வாகன எண்ணை பதிவிட்டு, வாகன சேஸ் எண் அல்லது எஞ்சின் எண்ணின் கடைசி ஐந்து எண்ணை பதிவிட்டு வாகன அபராதம் தொடர்பான விவரத்தை பார்க்கலாம்.
வாகன உரிமம் எண் மூலமாக அறியலாம்
மேலும் முகப்பு பக்க அருகிலேயே வாகன உரிமம் எண் கேட்கும் அதை பதிவிட்டு கீழே காட்டும் எண்ணை பதிவிட்டால் தங்களது வாகன உரிமம் தொடர்பான அபராத விவரத்தை பார்க்கலாம்.
No comments: