Signal ஆப்ஸை எப்படி லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் iOS ஐபாட் சாதனங்களில் பயன்படுத்துவது?

 வாட்ஸ்அப்பின் ப்ரைவஸி பாலிசி சர்ச்சைக்குப் பிறகு சிக்னல் ஆப்பை ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, உலகளவில் சிக்னல் பயன்பாடு குறிகிய காலத்தில் பிரபலமடைந்துள்ளது. பல மில்லியன் கணக்கான பயனர்கள் இப்போது வாட்ஸ்அப்பிற்கு பதிலாக சிக்னல் ஆப்ஸை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் போல், சிக்னல் ஆப்சையும் டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் ஐபாட் இல் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சிக்னல் பயன்பாட்டின் வெப் வெர்ஷன் சிக்னல் ஆப்பை, வாட்ஸ்அப் போன்று மொபைல் மற்றும் டெஸ்க்டாப், லேப்டாப், ஐபாட் போன்ற சாதனங்களில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால், அதில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. காரணம், வாட்ஸ்அப் போன்று சிக்னல் பயன்பாட்டிற்குத் தனியாக வெப் வெர்ஷன் என்று ஒரு பயன்பாடு வெர்ஷன் கிடையாது. ஆனாலும், கீழே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறையைப் பின்பற்றினால் இதைச் சாத்தியப்படுத்தலாம்.


டெஸ்க்டாப், லேப்டாப் சாதனங்களில் எப்படி சிக்னல் ஆப்ஸை பயன்படுத்துவது? 


வழிமுறை 1: முதலில் உங்களுடைய வெப் ப்ரவுஸர் வழியாக https://signal.org/download/ என்கிற அதிகாரப்பூர்வ சிக்னல் டவுன்லோட் பக்கத்திற்குச் செல்லுங்கள். 


வழிமுறை 2: இப்போது, சிக்னலின் டெஸ்க்டாப் வெர்ஷனை டவுன்லோட் செய்ய "Download for Windows" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.


வழிமுறை 3: அல்லது https://updates.signal.org/desktop/signal-desktop-win-1.39.5.exe என்கிற இந்த லிங்க்-ஐ பிரௌசரில் ஓபன் செய்தால் சிக்னல் பயன்பாட்டின் டெஸ்க்டாப் வெர்ஷன் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகும். 


வழிமுறை 4: பதிவிறக்கம் செய்யப்பட்ட .exe ஃபைலை இன்ஸ்டால் செய்து, அதை பின்னர் உங்களின் விண்டோஸ் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஓபன் செய்யவும்.


வழிமுறை 5: இப்போது, உங்களின் சிக்னல் அக்கவுண்ட்டை டெஸ்க்டாப் வெர்ஷனில் இணைக்க, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சிக்னல் ஆப்ஸை ஓபன் செய்து, செட்டிங்ஸ் சென்று Linked device ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 


வழிமுறை 6: இப்போது, வெப் வெர்ஷனில் காட்டப்பட்டும் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்களின் சிக்னல் அக்கௌன்ட்டை எளிதாக லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

ஐபாட் சாதனத்தில் எப்படி சிக்னல் ஆப்ஸை பயன்படுத்துவது? 


வழிமுறை 1: முதலில் உங்களுடைய வெப் ப்ரவுஸர் வழியாக https://signal.org/download/ என்கிற அதிகாரப்பூர்வ சிக்னல் டவுன்லோட் பக்கத்திற்குச் செல்லுங்கள். 


வழிமுறை 2: இப்போது, சிக்னலின் ஐபாட் அல்லது ஐபோன் வெர்ஷனை டவுன்லோட் செய்ய "Download for iPad or iPhone" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.


வழிமுறை 3: அல்லது https://apps.apple.com/us/app/signal-private-messenger/id874139669 என்கிற இந்த லிங்க்-ஐ பிரௌசரில் ஓபன் செய்தால் சிக்னல் பயன்பாட்டின் ஐபாட் வெர்ஷன் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகும். 


வழிமுறை 4: பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர். ஆப்ஸை இன்ஸ்டால் செய்து, அதை உங்கள் ஐபாட் வழியாக ஓபன் செய்யவும்.


வழிமுறை 5: இப்போது உங்கள் சிக்னல் அக்கவுண்ட்டை ஐபாட் உடன் இணைக்க, உங்கள் ஐபாட் இல் உள்ள சிக்னல் ஆப்ஸை ஓபன் செய்து, செட்டிங்ஸ் சென்று Linked device ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 


வழிமுறை 6: இப்போது, ஐபாட் வெப் வெர்ஷனில் காட்டப்பட்டுள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து லாக்-இன் செய்து சிக்னல் ஆப்ஸை எளிதாக பயன்படுத்துங்கள். அவ்வளவுதான்! இதேபோல் சிக்னல் ஆப்பிற்கான Mac வெர்ஷன் மற்றும் Linux வெர்ஷனையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


1 comment:

Powered by Blogger.