186 ஜிபி டேட்டா - வைரலாகும் நிலவின் முப்பறிமான படம்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் நிலவின் முப்பறிமான படத்தை உருவாக்கி இருக்கிறான். இதற்கு அந்த சிறுவன் சுமார் 50 ஆயிரம் படங்களை ஒருங்கிணைத்து இருக்கிறான்.
பூனேவை சேர்ந்த பிரதமேஷ் ஜாஜு எனும் சிறுவன் தன்னை வளரும் வானியலாளர் என கூறுகிறார். நிலவின் முப்பறிமான படத்தை உருவாக்க அதிக புகைப்படங்களை இயக்கும் போது தனது லேப்டாப் கிட்டத்தட்ட பாழாகிவிட்டதாக பிரதமேஷ் தெரிவித்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட படங்களின் ஒட்டுமொத்த அளவு 186 ஜிபி ஆகும். ஒருங்கிணைக்கப்பட்ட படம் 50 எம்பி அளவில் இருந்தது. பின் மொபைல் போனில் பார்க்க ஏதுவான புகைப்படத்தின் அளவை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதிக ரெசல்யூஷன் கொண்ட படத்தில் நிலவின் பரப்பளவு மிக சிறப்பாக காட்சியளிக்கிறது.
இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை பிரதமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இதே புகைப்படம் சிறுவனின் ரெடிட் அக்கவுண்டிலும் பகிரப்பட்டு இருக்கிறது. சிறுவனின் முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments: