சூப்பரான மேலப்பாளையம் பிரியாணி

v


 தேவையான பொருட்கள்


விருப்பமான இறைச்சி வகை - 2 கிலோ

 சீரக சம்பா அரிசி - 2 கிலோ

கரம் மசாலா தூள் -  1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 6 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தயிர் - 200 கிராம்

நெய் - 200 மில்லி

நல்லெண்ணெய் - 100 மில்லி

பெரிய வெங்காயம் - 800 கிராம்

தக்காளி - 800 கிராம

மிளகாய் - 16

புதினா, கொத்தமல்லி தழை - தேவையான அளவு

பட்டை - 10 கிராம்

அன்னாசி பூ - 3

ஏலக்காய் - 10 கிராம்

கிராம்பு - 10 கிராம்

பிரியாணி இலை - 3

இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்

அலுமினியம் பாயில் பேப்பர்



செய்முறை


பிரஷர் குக்கரில் இறைச்சியை போட்டு வேகவைக்க தேவையான அளவு நீர் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதில் பாதியை சேர்த்த 4 விசில் வரும் வரை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் 2 கிலோ சீரக சம்பா அரிசியில் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் தனியாக பாதியளவு வேக வைத்து  கொள்ளவும்.


இன்னொரு பாத்திரத்தில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அன்னாசி பூ. கிராம்பு. பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.


அடுத்து அதில் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு கரம் மசாலா தூள், புதினா இலை, மிளகாய்த்தூள், உப்பு, தயிர் சேர்த்து கிரேவி தயார் செய்யவும்.


அதில் வேக வைத்த இறைச்சியை நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


பாதி வெந்த நிலையில் உள்ள அரிசியில் அதன் ஒரு பாதியில் கிரேவியில் பாதியளவு ஊற்றி அதன் மேலாக மீதமுள்ள சாதத்தை பரப்பி மறு பாதி கிரேவியை அதன் மீது ஊற்றி பாயில் பேப்பர் மூலம் பாத்திரத்தை மூடி தம் போட வேண்டும்.


தீயை பாதி அளவுக்கு பத்து நிமிடம் எரிய விட்ட பின்னர் அலுமினியம் பேப்பரை அகற்றி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டால் மேலப்பாளையம் பிரியாணி ரெடி.

No comments:

Powered by Blogger.