டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? இதில் என்ன ஸ்பெஷல்?




தங்கத்தில் இந்தியர்கள் பாரம்பரியமாகவே முதலீடு செய்து வந்துள்ளனர். எனினும், தற்காலத்தில் தங்க முதலீடு நவீனமயமாகியுள்ளது. தங்க நகை, நாணயமாக மட்டுமல்லாமல், தங்க மியூச்சுவல் ஃபண்ட், தங்கப் பத்திரம், டிஜிட்டல் தங்கம் என பல்வேறு முதலீட்டு முறைகள் அறிமுகமாகியுள்ளன.


இதில் டிஜிட்டல் தங்கத்துக்கு பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் சில பயன்கள், சவுகரியங்களை பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.


தங்க நகையை வாங்க நகைக் கடைக்கு செல்ல வேண்டும். ஆனால், டிஜிட்டல் தங்கத்தை வீட்டில் இருந்துகொண்டே மொபைலில் வாங்கிவிடலாம். கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பல கடைகள் பூட்டுக்கிடப்பதும், வீணாக கடைக்கு செல்வது பாதுகாப்பு இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தங்கத்தின் தரத்திலும் எந்தவொரு சிக்கலும் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை பாதுகாப்பான லாக்கரில் உங்கள் பெயரில் சேமித்து வைக்கின்றனர். இந்த லாக்கருக்கு இன்சூரன்ஸும் உண்டு. இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.


டிஜிட்டல் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது மட்டுமல்லாம, எப்போது வேண்டுமானாலும் மொபைலிலேயே விற்றுவிடலாம். நீங்கள் வாங்கி சேமித்து வைத்த டிஜிட்டல் தங்கம் உங்களுக்கு வேண்டுமெனில், சில தினங்களில் நேரடியாக வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுவார்கள்.


தற்போது Phonepe உள்ளிட்ட சில மொபைல் ஆப்களில் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்து ஈசியாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.


No comments:

Powered by Blogger.