அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

 சீன உளவுத்துறை மற்றும் ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஜனாதிபதி, பிரதமர் மோடி, அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்திய தலைமை நீதிபதி உட்பட 10,000 இந்திய ஆளுமைகளை உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகள் 

ஜனாதிபதி, பிரதமர் மோடி, அமைச்சரவை, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் என அரசியல், நீதித்துறை உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகளை சீன அரசுடன் தொடர்புடைய நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்திய முக்கிய புள்ளிகள் 

சீன அரசாங்கத்துடனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புடைய ஷென்சனை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய முக்கிய புள்ளிகளை கண்காணித்து வருகிறது.


ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 

ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் இந்தியாவில் 10,000 மேற்பட்ட முக்கிய நபர்களை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் தொடர்பான தகவல்களை ஜென்ஹூவா டேட்டா இன்போடெக் நிறுவனம் சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சீன உளவுத்துறை மற்றும் ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் அவர்களது குடும்பங்கள், மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ்சிங் சௌகான் அதேபோல் அமைச்சர் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் முப்படைத் தலைவர் பிபின் சிங் ராவத் அனைவரும் இந்த பட்டியலில் உள்ளனர். அதேபோல் இதில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி பெயரும் இடம்பெற்றுள்ளது.



நீதிபதிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் 

அரசியல் மற்றும் உத்தியோகபூர்வ ஸ்தாபதனத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் காண்காணிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பயங்கரவாதம், போதைப் பொருள், தங்கம், ஆயுதங்கள் என குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.



அத்துமீறி நடத்திய தாக்குதல் 

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் சீன ஏணைய சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு அதிகமாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜென்ஹூவாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு இந்த தகவல்கள் திரட்டியுள்ளது. இந்தியா சீன எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வரும் இந்த நிலையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source: Indian Express

Tags: India | China | Digitalwar


No comments:

Powered by Blogger.