உங்கள் பணத்தினை எப்படி சேமிக்கலாம்.. சில சிறந்த வழிகள் இதோ..!
பணத்தினை செலவழிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. ஆனால் அதனை சேமிக்க என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா? அப்படின்னா அது உங்களுக்கான பதிவு தான்.
பணக்கார குடும்பங்களில் பணத்தினை எப்படி செலவு செய்வது? எப்படி சேமிப்பது என பல வழிகள் உள்ளன. ஆனால் நடுத்தர குடும்பங்களில் பணத்தினை எப்படி சேமிப்பது என்று தெரிவதில்லை. சிலர் சேமிப்பதாக நினைத்து ஏதோ ஒன்றில் முதலீடு செய்து. இறுதியில் முதலீட்டினையே இழக்கின்றனர்.
இன்னும் சிலர் பணத்தினை எப்படி சேமிப்பது என்றே தெரியாமல் உள்ளனர். கைக்கு கிடைத்ததை உடனே செலவு செய்து விட்டு, பின்னர் கஷ்டமான காலங்களில் கஷ்டப்படுகின்றனர்.
அனாவசிய செலவினை குறைக்கலாம்
ஆனால் சிரமமின்றி பணத்தினை சேமிக்க சில வழிகளை இங்கே கொடுத்துள்ளோம். வாருங்கள் அதனை பற்றி பார்க்கலாம். உங்களது அனாவசிய செலவினங்களை குறைத்தாலே, உங்களது சேமிப்பினை உயர்த்த முடியும். நாம் கடைத் தெருவுக்கு செல்வோம்.
நாம் ஒன்று வாங்க வேண்டும் என்று சென்றிருப்போம், ஆனால் அங்கு சென்ற பின்னர் இன்னும் சில பொருட்களையும் வாங்குவோம். உதாரணத்திற்கு துணிக்கடைக்கு செல்லும்போது, ஒரு ஆடை வாங்கலாம் என்றும் செல்வோம், ஆனால் அங்கு சென்ற பின்னர், இது நன்றாக இருக்கிறதே என இரண்டாக வாங்கி வருவோம். இது அனாவசிய செலவுகள் தானே.
செலவுகளை எழுத பழகுங்கள்
செலவினங்களை குறைக்க முதலில் செலவுகளை எழுத பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சேமிப்பினை தொடங்குவதற்காக முதல் படியே இதுதான். உங்களுடைய ஒவ்வொரு செலவினையும் எழுத பழகுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் கடைத் தெருவுக்கு செல்கிறீர்கள், அங்கு காபி டி செலவு, உணவு செலவு, வீட்டு செலவு என அனைத்தினையும் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.
அப்படி சில மாதங்கள் எழுதி பழகும் போது, உங்களுடைய அனாவசிய செலவுகள் என்ன? எதைக் குறைக்கலாம். எப்படி சேமிப்பினை பெருக்கலாம் என்ற வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
பட்ஜெட் போடுங்கள்
ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள். என்பதை பட்ஜெட் போடுங்கள். எதற்காக எவ்வளவு தொகை செலவிட வெண்டும்.அதில் உங்களது மொத்த வரவு என்ன? செலவு என்ன? அதோடு வரவுக்கு ஏற்ற செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். மாத மாதம் அடிக்கடி செய்யப்படும் செலவுகள், வாகன பராமரிப்பு என பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முன்னுரிமை என்ன?
உங்கள் செலவுகள் வரவுக்கு அதிகமாக இருந்தால், அதனை குறைக்க திட்டமிடுங்கள். அத்தியாவசிய தேவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதே நேரம் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அதனை உங்களது குறுகிய காலத்திற்கு என்று அல்லாமல், நீண்டகால நோக்கில் யோசித்து கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு, ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் எனில் 20 ஆயிரம் - 30 ஆயிரம் என செலவிடாமல், உங்களின் தேவைக்கு ஏற்ப குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். செல்போன் அவசியம் தான் என்றாலும், அது எவ்வளவு? என்பதை யோசிக்க வேண்டும்.
அவ்வப்போது சேமிப்பு எவ்வளவு என்பதை பாருங்கள்
உங்கள் வரவு செலவு போக, எவ்வளவு உங்களால் மிச்சம் செய்ய முடியும் என்பதை மாதம் ஒரு முறையாவது கணக்கிட்டு பாருங்கள். இதனால் உங்களது சேமிப்பு திறன் அதிகரிக்கும். நீங்கள் உங்களையும் அறியாமல் சேமிக்க கற்றுக் கொள்வீர்கள். அதோடு உங்களது குந்தைகளுக்கும் சேமிக்க கற்றுக் கொடுங்கள்.
Tags: Money | Savings
No comments: