மாதம் ரூ.3,000 பென்ஷன் வழங்கும் அரசின் திட்டம்.. என்ன தகுதி.. எப்படி இணைவது..!
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம். இது கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பயனடையும் வகையில், மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சரி இந்த திட்டத்தில் யார் யார் இணைந்து கொள்ளலாம்? எப்படி இணைவது? மற்ற விவரங்களைக் பார்க்கலாம் வாருங்கள்.
யார் யாருக்கு இந்த திட்டம் பொருந்தும்?
விவசாயத் தொழிலாளார்கள், மீனவர், கட்டுமானத் தொழிலாளர், ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர் கைத்தறி நெசவு தொழிலாளர்கள், தூய்மைப் பணிபுரிவோர், உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், கட்டட தொழிலாளர்கள், புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர், அச்சக தொழிலாளர், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், சிறு வியாபாரிகள், வீட்டுப் பணியாளர், பொற்கொல்லர், திரைத் தொழிலாளர் உள்ளிட்ட பல துறையினை சார்ந்தவர்கள் பயன் பெற முடியும்.
என்ன தகுதி?
இந்த பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தில் இணைய மாதம், அமைப்பு சாரா துறையில் 15,000-க்கும் குறைவாக வருமானம் உடையவர்களுக்கும் பொருந்தும். மேலும் இந்த திட்டத்தில் 18 - 40 வயதுடையோர் மட்டும் இந்த திட்டத்தில் இணைய முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர் வருமான வரி செலுத்தகூடாது. அதோடு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் சேர்ந்திருக்க கூடாது.
PM-SYM அம்சங்கள் என்ன?
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இது 50:50 அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட பங்களிப்பினை சந்தாதாரரும், பாதியினை மத்திய அரசும் செலுத்தும். அதாவது ஊழியர்கள் 100 ரூபாய் என்றால், அரசு 100 ரூபாய் செலுத்தும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்கள் 60 வயது நிறைவடையும் போது மாதம் 3,000 ரூபாயினை பென்ஷனாக பெறுவார்கள். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், அவரின் துணைக்கு இந்த இந்த தொகை கிடைக்கும்.
எப்படி இணைவது?
தகுதி வாய்ந்த சந்தாதாரர்கள் அருகிலுள்ள காமன் சர்வீஸ் செண்டருக்கு (CSCs ) சென்று இணையலாம். இது CSCs எல் ஐசியிலும் உண்டு. இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள ஜன் தன் வங்கிக் கணக்கும் மற்றும் ஆதார் கார்டும் தேவை. இந்த சேவையினை நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காமன் சர்வீஸ் செண்டர்கள் வழங்கி வருகின்றன.
10 வருடத்திற்குள் வெளியேறினால்
நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து 10 வருடத்திற்குள் வேண்டாம் என வெளியேற நினைத்தால், நீங்கள் செலுத்திய தொகையோடு வங்கி சேமிப்பு கணக்கு வட்டி மட்டுமே கிடைக்கும். அதோடு உங்களுக்கு செலுத்த வேண்டிய அரசின் பங்கும் கிடைக்காது. ஆக நீங்கள் 10 வருடத்திற்குள் வெளியேறினால் வங்கியில் கிடைக்கும் சேமிப்பு வட்டி மட்டும் தான் மிச்சம். இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
10 வருடத்திற்கு பின்பு வெளியேறினால்
ஒரு வேளை நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து 10 வருடத்திற்கு பிறகு வெளியேருகிறீர்கள் என்றால், எதுவரை நீங்கள் பணம் செலுத்தியுள்ளீர்களோ? அதுவரை வட்டியுடன் திரும்ப கிடைக்கும். இதில் உள்ள ஒரு நலல் விஷயம் என்னவெனில் வங்கி வட்டி அல்லது தொழிலாளர் அமைச்சகம் கணக்கிடும் வட்டியில் எது அதிகமோ? அந்த வட்டியினை பெற்றுக் கொள்ள முடியும். இதிலும் அரசின் பங்கு கொடுக்கப்படுவதில்லை.
Tags: PY - SYM | PYSYM | Pension
No comments: