உண்மை என்ன? - முட்டைக்குள் இருக்கும் குஞ்சு மூச்சு விடுமா?


 


ஒவ்வொரு உயிரினத்திற்கும்  உயிர்வாழ ஆக்ஸிஜன் அவசியம் என்பதை அனைவரும் அறிந்ததே. அது சரி முட்டைக்குள் இருக்கும் குஞ்சு எப்படி மூச்சு விடுகிறது ?



மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தாயின் கருப்பையில் வளரும் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலமாக ஆக்ஸிஜன் செல்கிறது. மேலும் குழந்தை வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு கழிவை அகற்றுகிறது. இவ்வாறுதான் வயிற்றில் உள்ள குழந்தை மூச்சு விடுகிறது.





படம் 1
ஆனால் முட்டையினுள் உள்ள குஞ்சிகளுக்கு தொப்புள்கொடி இல்லை, மாறாக இவை முட்டையினுள் உள்ள காற்றகத்தை ( படம் 1-இல் காட்டப்படுள்ளது ) சார்ந்துள்ளது.



இந்த காற்றகத்தின் உதிவியோடுதான் முட்டையினுள் உள்ள குஞ்சுகள் அதில் நிரப்பப்பட்ட ஆக்ஸிஜனை எடுத்து கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. இந்த கார்பன்டை ஆக்சைடு முட்டையினுள் உள்ள சிறு துளைகளின் வழியே வெளியேற்றப்படும். இதே துளையின் வழியே மீண்டும் ஆக்ஸிஜன் உள்ளே செல்லும். இவ்வாறுதான் முட்டைக்குள் இருக்கும் குஞ்சு மூச்சு விடுகிறது.


படம் 2
முட்டை ஓட்டில் உள்ள சிறு துளைகளை (படம் 2-இல் காட்டப்படுள்ளது ) நம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியின் உதிவியோடு பார்க்கலாம்.

No comments:

Powered by Blogger.