தெரிந்துகொள்வோம் - சந்திரனைப் பற்றிய 10 உண்மைகள்

 

சந்திரன் ஒரு தூசி நிறைந்த பாறை. இதன் விட்டம் சுமார் 3,476 கிமீ. பூமியில் இருந்து இதன் தொலைவு சுமார் 238,857 மைல்கள்.


நிலவு ஒவ்வொரு 27.3 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றுகிறது.


நமது நிலவு சூரிய மண்டலத்தின் ஐந்தாவது பெரிய நிலவு ஆகும் [வியாழனின் கன்னிமைட் (Ganymede) முதல் இடத்தில் உள்ளது ]


நிலவின் ஈர்ப்பு விசை பூமியில் இருந்து சுமார் 1/6 பங்கு மட்டுமே உள்ளது. பூமியில் உங்கள் எடை 60 கிலோ என்றால் நிலவில் உங்கள் எடை 10 கிலோ மட்டுமே.


சந்திரனில் வெப்பநிலை சூரியன் அதன் மேற்பரப்பைக் கடக்கும்போது, 127 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடையும். சூரிய வெளிச்சம் இல்லாதபோது சுமார் -153 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும்.


இரவில் சந்திரன் பிரகாசிக்கிறது என்றாலும், அதற்கு சொந்த ஒளி இல்லை. சூரியனில் இருந்து வரும் வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது என்பதால்தான் சந்திரனை நாம் காண்கிறோம்.


சந்திரன் எவ்வாறு உருவானது என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக கூறவில்லை. திசியா என்ற ஒரு செவ்வக பாறை 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் மோதியதால் உருவான குப்பைகள் ஒன்றாக இணைந்து சந்திரன் உருவாகியது என்ற கோட்பாடு உள்ளது.


சந்திரன் முழுமையான கோள வடிவில் இல்லை மாறாக, அது ஒரு முட்டை போன்ற வடிவம் கொண்டுள்ளது.


பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் நில அதிர்வுகள் உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


நவம்பர் 17, 1970 அன்று, சந்திரனில் பயணம் செய்த முதல் வாகனம் சோவியத் ரோபோ Lunokhod 1 ஆகும்.

No comments:

Powered by Blogger.