தெரிந்துகொள்வோம் - பூமி சுழல்வதை ஏன் நம்மால் உணர முடிவதில்லை?

 




ஒவ்வொரு 23 மணிநேரம் மற்றும் 56 நிமிடங்களில் நமது பூமி அதன் அச்சுக்கு ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது. இது ஒரு நிலையான விகிதத்தில் சுழல்கிறது. சரி பூமி சுழல்வதை ஏன் நம்மால் உணர முடிவதில்லை?



பூமியோடு சேர்ந்து பூமியில் உள்ள நாமும் சுழன்றுகொண்டு இருப்பதினால் பூமியின் சுழற்சியை உணர முடிவதில்லை. எடுத்துக்காட்டாக நாம் வாகனத்தில் மேடுபள்ளம் இல்லாத சாலையில் சீரான வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது தண்ணீர் குடிக்க முடியும். தண்ணீரும் சிந்துவதில்லை. காரணம் நாமும் பயணம் செய்யும் வாகனத்தில் உள்ள பொருட்களின் வேகமும் வாகனத்தின் வேகத்திற்க்கு இணையாக இருக்கும்.



இயக்க நிலையில் உள்ள வாகனத்தை உடனடியாக நிறுத்தினால் நாம் இயக்க நிலையை உணருவோம். அதேபோல் பூமியின் சுழற்சி தடைபட்டால் மட்டுமே நம்மால் பூமியின் சுழற்சியை உணர முடியும்.

Post Comments

No comments:

Powered by Blogger.