ஜியோபோனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி?
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வரகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஜியோபோன் மாடல்களை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த போனில் பல்வேறு சிறப்பு வசதிகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் அளவுக்கு இல்லையென்றாலும் கூட குறிப்பிட்ட சில வசதிகளை கொண்டுள்ளது ஜியோபோன் மாடல்.
குறிப்பாக ஜியோபோனில் வைஃபை ஆதரவு, வோல்ட்இ தொழில்நுட்ப ஆதரவு, கூகுள் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 என இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்தது, விரைவில புதிய ஜியோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இப்போதுள்ள ஜியோபோனில் அனைத்து வசதிகளும் உள்ளன, அதில் ஸ்கிரீன் ஷாட்டைக் கிளிக் செய்வதற்கான விருப்பம் கூட உள்ளது. எனவே ஜியோபோனில் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க உங்களை அனுமதிக்கும் சில வழிமுறைகளை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
வழிமுறை-1 முதலில் ஜியோபோனை அன்லாக் செய்து, பின்னர் நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க விரும்பும் திரைக்கு செல்ல வேண்டும்.
வழிமுறை-2 அடுத்து நீங்கள் OK பொத்தானை அழுத்த வேண்டும், பின்னர் சேவைகளை செயல்படுத்த OK Google என்று சொல்ல வேண்டும்.
வழிமுறை-3 அதன்பின்பு நீங்கள் ஸ்கிரீன்ஷாட்டை எடு (Take a Screenshot) என்று சொல்ல வேண்டும்,பின்னர் கூகுள் அசிஸ்டன்ட் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க அனுமதிக்கும்
வழிமுறை-4 இந்த செயல்முறை முடிந்ததும் Screenshot save to என்று ஒரு அறிவிப்பை பெறுவீர்கள், பின்னர் நீங்கள் okபொத்தானை அழுத்த வேண்டும். போல்டரை மாற்ற வேண்டுமென்றாலும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் தேர்வுசெய்ய போல்டர் வழியே சென்று ஸ்கிரீன்ஷாட்டை பார்க்க முடியும்.
Tags: Jio Phone | Screenshot
Bro itha pathi my blog la poduran pls copy right patta matan pls apporuval thanka
ReplyDelete