வாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா?- புகார் அளிப்பது எப்படி?

 வாட்ஸ் ஆப்பின் மூலம் பயனர்களுக்கு வரும் தேவையற்ற மெசேஜ்களை தடுக்க அதை அனுப்பும் எண் குறித்து வாட்ஸ் ஆப் நிர்வாகத்திடம் புகார் அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.



பிரதான தேவையாக வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதான தேவையாக இருந்து வருகிறது. அலுவலக பணிகளில் தொடங்கி நண்பர்களுடனான சேட்டிங் குரூப் உருவாக்கி ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறுவது பிடித்த தகவலை அனைவருடம் பகிர்ந்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.



தேவையற்ற நபர்களிடம் இருந்து மெசேஜ்

வாட்ஸ்ஆப் செயலியில் சில சமயங்களில் தேவையற்ற நபர்களிடம் இருந்து தொடர்ந்து தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களை பிளாக் செய்வது என்று ஒருவழியில்லை இருந்தாலும், அவர்கள் மீது வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் புகார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.



வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் புகார்

வாட்ஸ் ஆப்பில் இருந்து தவறான நபர்களிடம் மெசேஜ்கள் வரும்பட்சத்தில் அவர்கள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் புகார் அளிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். வாட்ஸ் ஆப் ஓபன் நிறுவனத்திடம் வாட்ஸ் ஆப் செயலி மூலமே தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.



செட்டிங்ஸ் தேர்வை கிளிக் 

வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்து More Options என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அது மேலே இருக்கும் மூன்று பட்டனை தேர்வு செய்யும்போது கிடைக்கும். இதை தேர்வு செய்து செட்டிங்ஸ் என்ற தேர்வை கிளிக் செய்யவேண்டும்.



Contact US என்ற விருப்பம் 

செட்டிங் என்ற ஆப்ஷனில் ஹெல்ப் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் தங்களை தொடர்புகொள்ள (Contact US) என்ற விருப்பத்தை கிளிக் செய்து உள்ளே நுழையவும்.



இமெயில் ஐடியை உள்ளிட வேண்டும் 

அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் தங்களது இமெயில் ஐடியை உள்ளிட வேண்டும், அதன்பின்பு உறுதி செய்வதற்காக மீண்டும் இமெயில் ஐடியை பதிவிட வேண்டும். அதன்பின் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.



ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும் 

புகாரை தெரிவிப்பதோடு மட்டுமின்றி பிரச்சனைக்குரிய எண்ணில் இருந்து வரும் சேட்டிங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் அனுப்ப வேண்டும். அதன்பின் தாங்கள் அனுப்பிய புகாரை வாட்ஸ் ஆப் நிர்வாகம் வெரிஃபை செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.


No comments:

Powered by Blogger.