எஸ்பிஐ ஏடிஎம் பணப்பரிவர்த்தனை தோல்வியடைந்தால் புகாரளிப்பது..எப்படி?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) புகார் அளிக்க சிறப்பு வலைத்தளத்தை கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
ஏடிஎம்களில் பணம் எடுக்க செல்லும் போது தோல்வியுற்ற பரிவர்த்தனை பிரச்சனையை நாம் பலமுறை சந்தித்திருப்போம். அப்போது நமக்கு இயந்திரத்தில் இருந்து பணம் கிடைத்திருக்காது, ஆனால் நமது வங்கி கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வங்கியிலும் இதுகுறித்து ஆன்லைனில் புகார்களை அளிக்க ஒரு வலைத்தளம் உள்ளது. எனவே, தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு புகார் வலைத்தளத்தை கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.இதுகுறித்து புகார் அளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழு விவரத்தையும் இங்கு காண்போம்.
எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி குறித்து புகார் அளிக்க பின்பற்ற வேண்டியவைகள் :
எஸ்பிஐ இணையதளத்தில் உள்நுழைந்து அதன் சிஎம்எஸ் வலைதள பக்கத்திற்கு செல்லவும்.அங்கு வாடிக்கையாளர் வகை, கணக்கு எண், புகார்தாரரின் பெயர், வங்கி கிளை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, புகாரின் வகை, சேவைகள் மற்றும் புகாரின் தன்மை போன்ற விவரங்களை நிரப்பவும்.
இந்த விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பு பொத்தானை அழுத்தவும்.
இதனை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நீங்கள் ஒரு புகார் எண்ணைப் பெறுவீர்கள். இதன் மூலம் உங்களது புகார் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் புகார் விசாரிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும். மேலும் உங்கள் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு தகவலும் உங்களுக்குக் கிடைக்கும்.
வேறு சில வழிகள் குறித்தும் தெரிந்து கொள்வோம் :
வாடிக்கையாளர் பராமரிப்பு :
வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிக்கு தகவல் அளிக்கவும். மற்றும் விசாரிக்க வேண்டிய விஷயத்தையும் தாக்கல் செய்யுங்கள் அந்த நிர்வாகி உங்களுக்கு ஒரு கண்காணிப்பு எண்ணைக் கொடுப்பார். அதன் மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும்.
வங்கி கிளைக்கு செல்லுங்கள் :
இது போன்ற புகார்களை அளிக்க நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் வங்கி கிளைக்கு நேராக சென்று புகார் அளிக்கலாம். இதன் மூலம் உங்கள் பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது.
மேலாளரை அணுகுங்கள் :
மேற்கண்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டும் உங்களது புகாருக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் நீங்கள் வங்கி கணக்கை வைத்திருக்கும் கிளை மேலாளரிடம் என்று புகார் அளிக்கவும்.
அரசு அதிகாரியிடம் செல்லுங்கள் :
அனைத்து புகார் நடவடிக்கைகளை நீங்கள் எடுத்த பின்னர் உங்கள் பணம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் பொது நிறுவனங்களுக்கு எதிரான சாதாரண மக்களின் குறைகளை கையாளும் அரசு உயர் அதிகாரியிடம் சென்று நேரிடையாக புகார் அளியுங்கள். உங்கள் பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்த உங்கள் பணம் மீண்டும் உங்களுக்கே கிடைக்கும்.
ஏடிஎம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்புக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் ஏடிஎம் சென்று உங்கள் பண இருப்பை பார்தாலோ அல்லது ஸ்டேட்மென்ட் குறித்து சரிபார்த்தாலோ உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உங்களை எச்சரிக்கும். இதன் மூலம் மற்ற நபர்கள் உங்கள் ஏடிஎம் கார்டை கொண்டு பரிவர்த்தனைகள் செய்வது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: SBI | SBI ATM | RBI
No comments: