பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி?

 வீடு பெறுவதற்கான தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். pmaymis.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.




பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக 20 மில்லியன் வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 


மற்றொன்று, பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர், மின்சாரம்) வழங்கும் வேறு சில திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இப்போது வரை 88 லட்சம் வீடுகளுக்கான ஒப்புதல்கள் வந்துள்ளன.


யாரெல்லாம் பெறலாம்?
12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், 9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர், 12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.



பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (EWS) மக்களில் 3 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தக்க சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம். 



அடுத்ததாக, குறைந்த ஊதியம் பெறுவோரும் (ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம்) இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக, 12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், 9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர், 12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.




மேற்சொன்ன தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்னர், சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்து, குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது இதர மூன்றாம் கூறின் பயனாளர்கள் (benefits under other 3 components) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.



 பின்னர், ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அடுத்த பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.  அந்தப் பக்கத்தில் உங்களுடைய பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் எண், குடும்பத் தலைவரின் பெயர் ஆகிய இதர விவரங்களையும் பூர்த்திசெய்ய வேண்டும். எல்லா தகவல்களையும் அளித்த பின்னர், வலைதளத்தின்  கடைசி பக்கத்திற்குச் சென்று, 'கேப்சாவை' (Captcha) சரியாகக் குறிப்பிட வேண்டும்.



இந்தத் திட்டம் குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோவிடம் பேசினோம்.



"இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள், உரிய காலத்துக்குள் பதில் வராவிட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 'பிரதமர் வீட்டிற்கான விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது' என்பதை அறிந்துகொள்ளலாம். இதற்கு, அவர் விண்ணப்பித்ததற்கான சான்று அவரிடம் இருக்க வேண்டியது அவசியம். பின்னர், விண்ணப்பித்த தேதியிலிருந்து இதுவரை விண்ணப்பம் செய்தவர்களில் எத்தனை நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது எனவும், எவ்வளவு நபர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என்கிற விவரத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், எதனால் குறிப்பிட்ட நபர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை, எவ்வளவு காலத்திற்குள் வீட்டிற்கான ஒப்புதல் கிடைக்கும் ஆகிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ஏன் வீடு வழங்கப்படவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.




இத்துடன், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததற்கான சான்றோடு, முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதலாம். அக்கடிதத்தில், 'கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, துறை சார்ந்த அதிகாரிககள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு அந்தக் கடிதத்தில் கோரலாம். இதை பிரதமரின் இ-செல்லிற்கும் கடிதமாக அனுப்பி தகவல்களைப் பெறலாம். 



இதன்மூலம், வீட்டைக் கட்டுவதற்கான உதவிகள் எவ்வளவு காலத்தில் வந்து சேரும் என்பதை முழுமையாக அறியலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கான பதில் வர வேண்டும். அப்படி இல்லையெனில், முதல் முறையீடு செய்யலாம்..." என்கிறார் அவர்.



Tags: PMAYMIS | House

Source: Vikatan Media 

1 comment:

  1. எங்களை போல் உள்ள ஏழைகளுக்கு வீடு கிடைக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.