தெரிந்துகொள்வோம் - பொய் கண்டுபிடிப்பான் எவ்வாறு செயல்படுகிறது?




பொய் கண்டுபிடிப்பான் (lie detectors) பொதுவாக காவல் துறையில் பயன்படுத்தபடுகிறது. இது ஒரு நபர் பொய் சொல்கிறாரா அல்லது உண்மை சொல்கிறாரா என்பதை கண்டறிய உதவுகிறது. சரி இந்த பொய் கண்டுபிடிப்பான் எவ்வாறு செயல்படுகிறது என்று பாப்போம்.



பொய் சொல்பவரை கண்டறிய அந்த நபரின் உடலில் பல உணரிகள் (Sensors) பொருத்தப்படும். இவை இதய துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச வீதம் வியர்வையின் அளவு போன்றவற்றை கண்டறிய உதவும். சோதனையின் போது ஆரம்பத்தில் சில எளிய கேள்விகள் கேட்கப்படுகின்றன, இதனால் அவற்றின் இயல்பான நிலைகள் பதிவு செய்யப்படுகின்றன., 



பின்னர் உண்மையான கேள்விகள் பின்பற்றப்படுகின்றன. சோதனை நபர் பொய் சொன்னால், அவர்கள் பதற்றமடைவார்கள், மற்றும் அவர்களின் மன அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். இதனை கொண்டு சோதனை நபர் பொய் சொல்கிறாரா அல்லது உண்மை சொல்கிறாரா என்பதை கண்டறிய முடிகிறது.

Post Comments

No comments:

Powered by Blogger.