தெரிந்துகொள்வோம் - மரங்களுக்கு புற்றுநோய் (cancer) வருமா?

 




இந்த கேள்விக்கு எளிமையான பதில் ஆம். மரங்களுக்கும் புற்றுநோய் வரும். இந்த புற்றுநோயானது பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகிறது.


புற்றுநோய் என்பது அசாதாரண உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற பிரிவு. இது மனிதர்களில் மட்டுமல்லாமல் தாவரங்களிலும் நடக்கும். சரி மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது இதில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?.


ஆம் உள்ளது, மனிதர்களில் புற்றுநோயானது இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவும் தன்மை கொண்டது. ஆனால் மரங்களில் அவ்வாறு பரவுவது இல்லை. காரணம் மனிதர்களைப் போல் ரத்த ஓட்ட அமைப்பு இல்லை மேலும் செல்கள் கடுமையான செல் சுவர்களால் சூழப்பட்டுள்ளன.


பெரும்பாலும் நாம் மரத்தில் காணும் முடிச்சுக்கள் அல்லது தடிப்புகள் இந்த புற்றுநோய் செல்கள் மூலமாகவே உருவாகியிருக்கும்.


No comments:

Powered by Blogger.