தெரிந்துகொள்வோம் - தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?

தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பதை அறியும் முன் நோய் எதிப்பு சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்.
நம் உடலில் எதேனும் ஒரு கிருமி நுழையும் பொழுது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது. இது கிருமியுடன் சண்டையிட்டு அந்த கிருமியை அழிக்கிறது. பின்பு அழிக்கப்பட்ட கிருமியின் தகவல்களை பதிவு செய்துகொள்கிறது.
மீண்டும் அதே போன்ற கிருமி உள்நுழையும் போது ஆன்டிபாடிகள் சேமித்த தகவலை கொண்டு விரைவில் அழித்துவிடும்.
✔தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாமா?✔
பொதுவாக தடுப்பூசியில் தீவிரத்தன்மை குறைக்கப்பட்ட கிருமி அல்லது கொல்லப்பட்ட கிருமி இருக்கும். முன்னதாக கூறியது போல் ஆன்டிபாடிகள் கிருமிகளை கொன்று அழிக்கப்பட்ட கிருமியின் தகவல்களை பதிவு செய்துகொள்கிறது. பின்பு அதே போன்ற கிருமி உள்நுழையும் போது ஆன்டிபாடிகள் சேமித்த தகவலை கொண்டு விரைவில் அழித்துவிடுகிறது.
ஆனால் இந்தமுறை நோயை ஏற்படுத்தாமலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கபடுகிறது. சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி மூலம் வெள்ளையணுக்களுக்கு பயிற்சி அளிக்கபடுகிறது.
✔தேசிய தடுப்பூசி தினம் என்று கொண்டாடப்படுகிறது?✔
மார்ச் 16
No comments: