மொபைல் மூலம் ஆதாரில் முகவரி மாற்றுவது/புதுப்பிப்பது/திருத்தம் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் எப்படி செய்ய வேண்டும், எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. ஆதார் எண் இல்லாமல் ஒரு செல்போன் நம்பர் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு ஆதாரின் தேவை உள்ளது. இந்த நிலையில், சிலர் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடு மாறும் போது, ஆதாரில் உள்ள முகவரியும் மாற்ற வேண்டும். இன்னும் சிலருக்கு ஆதார் கார்டில் முகவரி தவறாக இருக்கக்கூடும்.
இப்படியான சூழலில் ஆதார் கார்டில் முகவரியை மாற்றுவதற்கு யாரையும் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே நமது ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்
ஆதாரில் முகவரி மாற்றுவது/புதுப்பிப்பது/திருத்தம் செய்வது எப்படி?
UIDAI போர்ட்டலுக்குச் சென்று ஆதார் கார்டை அப்டேட் செய்துகொள்ளலாம். UIDAI இணையதளத்துக்குச் செல்ல இங்குக் க்ளிக் செய்யவும்
https://ssup.uidai.gov.in/ssup/
பின்பு, முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Update Aadhar என்ற பிரிவுக்குள் சென்று, ஆதாரில் பதிவு செயய்யப்பட்ட மொபைல் எண்னை எண்டர் செய்ய வேண்டும். இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். அதை எண்டர் செய்ய வேண்டும்.
இப்போது 'Address Update' என்ற கட்டத்தில் தேவையான தகவல்களை வழங்கவும். புதிய முகவரியை உள்ளீடு செய்யவும். இந்த முகவரிக்கு தான் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்களுக்கு தபாலில் வரும்.
இவ்வாறு முகவரியை பூர்த்தி செய்த பிறகு, உங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்தெந்த ஆவணங்களை பதிவேற்றலாம் என்பதை இங்கு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய மொபைல் எண்னை ஆதாரில் பதிவு செய்யவில்லை என்றால், ஆன்லைனில் ஆதாரை புதுப்பிக்க முடியாது. அரசு சேவை மையத்திற்குச் சென்று தான் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.
No comments: