வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா..?- எப்படி தெரிந்துகொள்வது?

 இந்தியாவில் இது தேர்தல் சீசன். மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்கு சொந்தமானது.




வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது இப்போது எளிதாகிவிட்டது.


உங்கள் மொபைல் மூலமாகவே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்


வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள:


தேசிய வாக்காளர் சேவை தளமான NVSP யின் எலக்ட்ரோல் தேடல் பக்கத்திற்கு செல்லுங்கள் (Electoral Search).

Click Here

இதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்து கொள்ள முடியும். உங்களை குறித்தான் தகவல்களை பதிவு செய்வது மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.

இல்லையெனில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.



EPIC எண் இருந்தால்,


NVSP Electoral Search பக்கத்திற்கு செல்லுங்கள்.

Click Here

Search by EPIC No என இருக்கும் குறியீட்டை க்ளிக் செய்யுங்கள்

EPIC எண்ணை அந்த கட்டத்தில் பதிவு செய்த பின், மாநிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் Search என இருப்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.



EPIC எண் இல்லை என்றால்,


NVSP Electoral Search  பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Click Here

Search by Details. என இருப்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களை அதில் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.



அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Votter ID  ஆப் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் பிறகு அதில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள் இப்போது நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் முகவரி போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்


App Link: Click Here

No comments:

Powered by Blogger.