தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர்... இதை செய்தால் போதும்!!

 கடந்த சில மாதங்களாக எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாக இருக்கிறது.

பிப்ரவரி மாதத்திலேயே இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதியன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. பிறகு பிப்ரவரி 14ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.


கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்காதா என சாமானிய மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.


சிலிண்டர் விலையில் 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். இதன்படி, indane கேஸ் சிலிண்டர் வாங்கும் மக்கள் Amazon Pay ஆப்பில் சிலிண்டர் புக்கிங் செய்தால் உங்களுக்கு 50 ரூபாய் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.


அமேசான் பே ஆப்பில் முதல்முறை சிலிண்டர் புக்கிங் செய்யும்போது மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இந்த கேஷ்பேக் சலுகையை அமேசான் நிறுவனமே வழங்குகிறது. அதாவது, 50 ரூபாய் செலவை அமேசான் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.


இந்த சலுகையை பெற, உங்கள் மொபைலில் Amazon Pay ஆப்பை இன்ஸ்டால் செய்தால் போதும். அதில் இண்டேன் சிலிண்டர் புக் செய்தால் 50 ரூபாய் உங்களுக்கே மீண்டும் வந்துவிடும்.


No comments:

Powered by Blogger.