809 ரூபாய் சிலிண்டர் வெறும் 9 ரூபாய்! இதப்பண்ணினா போதும்!!

 பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்தால் 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என கூறப்படுகிறது. அது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

சமையில் எரிவாயு, சமையல் சிலிண்டர் இரண்டின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதே இவற்றின் விலை அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.


அதனால் தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்ய தொடங்கிவிட்டனர்.  ஏனென்றால் ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்யும் போது அவர்களுக்கு பல ஆஃபர்கள் கிடைக்கின்றன.


அமேசான் போன்ற ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு 200 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது பேடிஎம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.


அதன்படி பேடிஎம் ஆப் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்தால் உங்களுக்கு 800 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். பேடிஎம் ஆப் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.


பேடிஎம் ஆப்பில் ’Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்ய வேண்டும்.


அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்த்து சிலிண்டரை புக் செய்யலாம்.


டெல்லியில் சிலிண்டர் விலை 809 ரூபாயாக இருக்கிறது. பேடிஎம் கேஷ் பேக் சலுகையில் சிலிண்டர் புக்கிங் செய்து 800 ரூபாய் கேஷ் பேக் கிடைத்தால் 9 ரூபாய்க்கு உங்களுக்கு சிலிண்டர் கிடைக்கும். சென்னையில் சிலிண்டர் விலை ரூ.835 ஆக இருப்பதால் ரூ.800 கேஷ் பேக் கிடைத்தால் 35 ரூபாய்க்கு நீங்கள் சிலிண்டர் வாங்க முடியும்.

No comments:

Powered by Blogger.