ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!

 இந்தியர்களின் அடையாள அட்டை, முகவரி ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஆதார் கார்டு. அரசும் பெரும்பாலான சேவைகளை ஆதாரினை காட்டாயமாக்கி வருகிறது.



குறிப்பாக வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் சிறிய பிரச்சனை என்றாலும், முன்பெல்லாம் ஆதார் மையங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு உங்களது ஆதாரில் முகவரி மாற்றமோ அல்லது பெயர் மாற்றமோ எப்படி செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.


என்னென்ன ஆவணங்கள் தேவை

இதற்காக நீங்கள் https://uidai.gov.in/ என்ற அரசு இணையத்தினை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் மெனு பாரில் My Aadhar என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு update my address என்பதை கிளிக் செய்து கொள்ளவும். இதில் முகவரி மாற்றம் செய்ய விரும்பினால், இருப்பிட சான்றிதழ், கேஸ் ரசீது, பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று தேவை. கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவை.


மொபைல் நம்பர் கட்டாயம்

ஏனெனில் நீங்கள் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய UIDAI-யின் இணையத்தில் லாகின் செய்து தான் மாற்ற முடியும். ஏனெனில் உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில், உங்களால் முகவரியை மாற்றம் செய்ய முடியாது. ஒரு வேளை நீங்கள் மொபைல் எண் பதிவு செய்யவில்லை எனில்., அருகில் உள்ள ஆதார் அப்டேட் செண்டர் தான் செல்ல வேண்டும்.


ஆதார் நம்பரை வைத்து லாகின் செய்யுங்கள்

ஆக UIDAI-யின் பக்கத்தினை லாகின் செய்து வெர்பிகேஷன் செய்த பிறகு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு, உங்கள் பதிவு எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒரு லிங்க் வரும். அந்த லிங்கினை கிளிக் செய்து agree என்பதை கிளிக் செய்ய வேண்டும். 


அதன் பிறகு ஒரு ஓடிபி எண் வரும். அதனை கொடுத்து, கேப்சா கோடினையும் பதிவும் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் SRN நம்பர் மொபைல் எஸ் எம் எஸ் வழியாக வரும். இப்போது SRN நம்பரை வைத்து, முகவரியில் மாற்றம் செய்யலாம். மாற்றம் செய்த பிறகு சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது உள்நாட்டு மொழியில் மாற்றம் செய்து சேவ் செய்து, சப்மிட் செய்யவும்.


போஸ்ட் வரும்

இதன் பிறகு address Validation letter உங்களது முகவரிக்கு (secret code -வுடன் இருக்கும்) போஸ்டலில் அனுப்பபடும். அதன் பிறகு மீண்டும் UIDAI-யின் இணையத்தினை லாகின் செய்து procedd to update address என்பதை கிளிக் செய்யவும். இப்பொது அப்டேட் அற்றஸ் என்பதை secret code-னை கொடுத்து அப்டேட் செய்யவும். இந்த secret code உங்களுக்கு அனுப்பட்ட போஸ்டலில் இருக்கும். நீங்கள் முகவரி மாற்றம் செய்ய கட்டாயம் இந்த secret code தேவைப்படும்.


ஆவணங்கள் அப்லோட் செய்ய வேண்டும்

ஆக இந்த secret code-னை கொடுத்த பிறகு நீங்கள் உங்களது முகவரி பக்கத்தினை preview செய்து பார்த்த பிறகு, சப்மிட் செய்யவும். முகவரி மாற்றத்திற்கான ஆவணங்களையும் நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும். ஆக இருந்த இடத்தில் இருந்து கொண்டே நீங்கள் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். 


எனினும் சரியான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்கள் அப்டேட் செய்த பிறகு அதனை https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/ என்ற இணையத்தில் மூலம் மாறியுள்ளதா என பார்க்கலாம். இதற்காக் நீங்கள் URN or SRN நம்பரை கொடுத்து லாகின் செய்து பார்த்துக் கொள்ளலாம். இன்னும் மற்ற விவரங்களையும் இந்த இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.