தெரிந்துகொள்வோம் - மூச்சை அடக்குவதால் பலம் அதிகரிக்குமா?

நாம் அதிக எடையை தூக்கும் போதோ அல்லது சில கடுமையான வேலையை செய்யும் போதோ மூச்சை அடக்கி செய்வோம். இப்படி செய்வதால் சிறிது நேரத்திற்கு தசைகள் திறன் அதிகரிக்கும். ஆனால் உண்மையில் நமக்கு அதிக வலிமை ஏற்படுவதில்லை.
நாம் மூச்சு பயிற்சியின் போது மூச்சை அடக்குவதால் இரத்தத்தில் பைகார்பனேட் செறிவு அதிகரிக்கிறது. இது உடற்பயிற்சியின் போது தயாரிக்கப்படும் லாக்டிக் அமிலத்தை சீராக்க உதவுகிறது. இதனை அமைதியான நிலையில் செய்வது நல்லது மேலும் மூச்சு பயிற்சியினை பயிற்சி ஆசிரியரின் துணைகொண்டு செய்வது நலம்.
நாம் அதிக எடையை தூக்கும் போதோ அல்லது சில கடுமையான வேலையை செய்யும் போதோ அதிகமாக மூச்சை அடக்குவது நல்லது அல்ல. தொடர்ந்து பல நிமிடங்கள் தங்கள் சுவாசத்தை அடக்கிய இருவரின் இரத்தத்தில் S100B எனப்படும் புரதத்தின் அளவு உயர்ந்ததாக 2009 ஆம் ஆண்டின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது நீண்ட கால மூளை சேதத்தின் அறிகுறியாகும்.
உடற்பயிற்சியும் அளவோடு செய்வதுதான் நலம்.
No comments: