வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ரகசியமாக பார்ப்பது எப்படி தெரியுமா?
உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் செயலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. சொந்த பயன்பாடு மட்டுமில்லாமல் அலுவலகம், கல்வி என அனைத்து தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப் தான் முன்னிலையில் உள்ளது. காலத்திற்கேற்ப வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டு கொண்டே இருக்கின்றன.
வாட்ஸ்அப்பில் நமக்கு தெரியாமல் இருக்கும் அம்சங்களை நாம் முறையாக பயன்படுத்தினால் நமக்கே பெரிதான பயன்பாடாக இருக்கும். வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதை பலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.
சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடவிட்டாலும் மற்றவர்கள் போடுவதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை யார் யார் பார்த்துள்ளார்கள் என்பதும் காண்பிக்கப்படும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நாம் ரகசியமாக பார்க்க முடியும். அதற்கு நாம் மற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ்அப்பில் அதற்கான சிறப்பு அம்சம் உள்ளது, அதை செய்தாலே நாம் மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ரகசியமாக பார்ப்பது எப்படி?
வாட்ஸ்அப்பில் உள்ள வலது மூலையில் மேலே உள்ள இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும்.
அதில் செட்டிங்ஸ் (settings) உள்நுழைந்து அக்கவுன்ட் (account) என்பதை தேர்வு செய்து Privacy-ல் இருக்கும் Read Reciepts என்ற முறை ஆப் செய்யவும்.
Settings-->Account-->Privacy-->Read Reciepts - Disable
இதனால் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது மற்றவர்களுக்கு தெரியாது. மேலும் இந்த முறையினால் ஒருவருக்கு நீங்கள் சாட் செய்யும் போது மெசேஜ் சென்றுவிட்டால் 2 டிக் மார்க் வரும். அதை அவர்கள் படித்துவிட்டால் அந்த டிக் மார்க் நீல நிறமாக மாறிவிடும். Read Receipt முறை நீங்கள் ஆப் செய்துவிட்டால் மெசேஜ் நீங்கள் படித்தாலும் அனுப்பியவர்களுக்கு நீல நிற டிக் மார்க் காட்டாது.
உங்களாலும் அவர்கள் படித்து விட்டார்களா என்பதை தெரிந்து கொள்ளும் நீல நிற டிக் மார்க் வராமல் இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மீண்டும் நீங்கள் இந்த முறையை மாற்றி வைத்து கொண்டால் பழைய நிலைக்கு மாறிவிடும்.
No comments: