SBI வங்கி அக்கவுண்டில் ஆதார் கார்டு இணைப்பது எப்படி?
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அரசு நேரடியாக அனுப்பும் மானியம், பணம் போன்ற பயன்களை பெற வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டுமென எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டை எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
ஏடிஎம் மூலம்:
எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்துக்கு நேரடியாக சென்று கார்டை செலுத்தி PIN எண்ணை பதிவிடவும். அதில் 'Service-Registrations' ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Aadhaar Registration ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் கணக்கை தேர்வு செய்து ஆதார் எண்ணை பதிவிடவும்.
இணைப்பு நிலவரம் குறித்து உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
ஆன்லைனிலும் வங்கிக் கணக்கு - ஆதார் கார்டை ஈசியாக இணைக்கலாம்:
www.onlinesbi.com என்ற எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் Log in செய்ய வேண்டும். அதில் 'My Accounts' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் 'Link your Aadhaar number' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை தேர்வு செய்து ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும். இணைப்பு நிலவரம் குறித்து உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
No comments: